தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள்: கிறிஸ்டியா ஃப்றீலான்ட் எச்சரிக்கை!
கனடாவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் ஏற்படக் கூடும் என்று வெளிவிவகார அசைம்சர் கிறிஸ்டியா ஃப்றீலான்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ்- டினார்ட்டில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ரஷ்யா போன்ற நாடுகளினால் கனேடிய தேர்தலில் தலையீடு செய்யப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கு உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது.
நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறு சில வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
ஆனாலும், வெளிநாட்டு சக்திகளின் தலையீடு செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் மிகத் துல்லியமாக காணப்படுகின்றது” என கூறினார்.
கடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலில், ரஷ்யா தலையிடு செய்ததாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல
-
இரணைதீவு கடற்றொழிலாளர்கள், அவர்களது தேசிய அடையாள அட்டைகளை காண்பித்து தொழில் செய்யமுடியும் என கிளிநொச
-
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ
-
நாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த
-
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை
-
ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தின் வருடாந்த அபிஷேகம் இன்று (செவ்வாய்