தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவு அமைச்சகம் முக்கிய அறிவிப்பு
In இந்தியா January 5, 2021 3:34 am GMT 0 Comments 1238 by : Yuganthini

வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள், தேர்தலில் மின்னணு முறையில் தபால் வாக்களிக்கும் நடைமுறை குறித்து ஆலோசனை நடத்தலாமென தேர்தல் ஆணையத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இவ்விடயம் குறித்து அனைத்து துறையினரிடமும் விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய சட்டப்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் தங்களுடைய தொகுதிகளில் நேரில் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படுமென கூறப்படுகின்றது.
வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து தேர்தல் ஆணையகம் இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.