தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு விசேட திட்டம்!
In இலங்கை November 13, 2020 5:05 am GMT 0 Comments 1485 by : Vithushagan

தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறையின் மூலம் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டு வேலைத்திட்டம தொடர்பாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இம்மாதம் 15ஆம் திகதி முதல் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்
தரம் மூன்றில் இருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரம் வரையான வகுப்புக்களின் பாடங்களை பூர்த்தி செய்யும் வகையில், பிரபல ஆசிரியர் குழாமின் பங்கேற்புடன் குறிப்பிட்ட பாடங்களைத் தொகுத்து ஒலிப்பதிவு செய்யும் நடவடிக்கை இந்நாட்களில் இடம்பெறுகின்றது.
இதன் பின்னர் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக வாரத்தில் 7 நாட்களும் வீட்;டில் இருந்தவாறு மாணவர்கள்; நிகழ்ச்சியில் பங்கேற்க சந்தர்ப்பம் கிட்டும். தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஒன்லைன் ஊடாகவும் இந்த வசதி கிடைக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை வகுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.