தொழிற்கட்சியுடனான சமரசம் பிரெக்ஸிற்றை பாதுகாக்க உதவும்: லீட்ஸம்
In இங்கிலாந்து April 8, 2019 6:43 am GMT 0 Comments 2600 by : Varshini
தொழிற்கட்சியுடன் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்வது, பிரெக்ஸிற் திட்டத்தை நாடாளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள உதவுமென பாராளுமன்ற அவைத் தலைவர் ஆண்ட்ரியா லீட்ஸம் தெரிவித்துள்ளார். அதற்கான சமிக்ஞைகளை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.
பிரெக்ஸிற் சர்ச்சைகள் தொடர்கின்ற நிலையில், அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் லீட்ஸம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிற்றின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சுங்கத்தில் நிலைத்திருப்பது தொடர்பான பிரதமர் மேயின் திட்டத்தை தொழிற்கட்சி ஆதரிப்பதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்காக காலக்கெடு எதிர்வரும் 12ஆம் திகதியாகும். எனினும், அதனை ஜூன் 30வரை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுத்துள்ளார். அதனை நிறைவேற்றிக்கொள்ள, நாளை மறுதினம் (புதன்கிழமை) நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் புதிய திட்டத்தை முன்வைப்பது அவசியமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்
-
பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 21 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று