நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா
In சினிமா December 4, 2020 11:06 am GMT 0 Comments 1264 by : Yuganthini

நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா- ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கொமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.
இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் என அனைத்து படங்கள் சிறந்த வெற்றியை தனதாக்கியது.
இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் இப்படம் கைவிடப்பட்டது.
இதையடுத்து இயக்குனர் ஹரி, விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவின.
இந்நிலையில் அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.