நடிகை சாய் பல்லவியின் வித்தியாசமான ஆசை
In சினிமா April 18, 2019 3:23 am GMT 0 Comments 2113 by : adminsrilanka

நடிகை சாய் பல்லவி பிரேம் படம் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் நடித்த வரும் நிலையில், தனக்கு வித்தியாசமான ஆசையிருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் வைத்தியருக்கு படித்துவிட்டு நடிக்க வந்துள்ளோன். சினிமா துறையில் தினமும் புதுமையான விடயங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில் சினிமாவுக்குள் எனக்கு வாய்ப்பு இருக்கும்வரை நடிப்பேன். இல்லை என்றால் வைத்தியராக தொழில் பார்க்க சென்றுவிடுவேன். எனக்கு சுற்றுப்பயணம் மிகவும் பிடிக்கும். நடனத்திலும் எனக்கு விருப்பம் உண்டு. நான் என்னைப் போன்று மாத்திரம் இருக்க விரும்புகின்றேன்.
நான் நடித்த படங்களில் வித்தியாசமான படம் தியா. அதில் ஒரு தாயாக நடித்தேன். இந்த படம் மூலம் என்னை மேலும் மெருகேற்றினேன். மாற்றங்களை நான் விரும்புவது இல்லை. ஒரே மாதிரி உணவை சாப்பிடுவேன். சிறுவயதில் இருந்து பழகியவர்களுடன் நான் நட்பாக இருப்பேன்.
ஆனால் சினிமா தொழில் இதற்கு வித்தியாசமானது. எல்லாவித கதாபாத்திரங்களையும் செய்ய ஆசை இருக்கின்றது. நான் நடித்த ஒவ்வொரு படமும் வெவ்வேறு விடயங்களை எனக்கு கற்றுக்கொடுத்ததது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.