நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

நகர் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு வழங்குவதற்கான நடுத்தர வருமான வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விண்ணப்ப படிவங்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகங்களிலும், யாழ்ப்பாணம், நல்லூர், வடமராட்சி வடக்கு, கரைச்சி, வவுனியா ஆகிய பிரதேச செயலகங்களிலும், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபை, வடமாகாண அலுவலகம், 134, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.