நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள 20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
அத்துடன், எட்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததுடன் ஒருவர் நடுநிலை வகித்தார்.
மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என எட்டுப் பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதனடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தைத் சீரமைத்து மீளவும் சபையில் முன்மொழியப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.