நல்லூர் பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு – தவிசாளர் பதவி இழக்கிறார்!
In இலங்கை December 15, 2020 10:47 am GMT 0 Comments 1493 by : Yuganthini
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால், பிரதேச சபைத் தவிசாளர் பதவி இழக்கிறார்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
அதனடிப்படையில், நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.