நாக்பூரில் வாக்களித்தார் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்!

உலகின் மிகவும் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே இன்று வாக்களித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி அம்கே. இவரின் உயரம் 63 செ.மீதான். அதாவது, 2 அடி ஒரு இஞ்ச் உயரம் கொண்ட ஜோதி அம்கே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
பல்வேறு திரைப்படங்கள், அமெரிக்க, இத்தாலி தொலைக்காட்சி நாடகங்களில் ஜோதி அம்கே நடித்துள்ளார்.
புனேயிலுள்ள லோனாவாலா பகுதியில் புகழ்பெற்றவர்களுக்காக வைக்கப்பட்ட மெழுகுச் சிலையில், ஜோதிக்காகவும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இன்று 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரேதசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இதில் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கே தனது பெற்றோருடன் காலையில் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
25 வயதான ஜோதி அம்கே, தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்களுடன் நாக்பூரில் ஒரு பள்ளியிலுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு இன்று காலை சென்று வாக்களித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு