நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 282 தொகுதிகளைக் கைப்பற்றும் – அமித் ஷா

நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 282 தொகுதிகளைத் தாண்டி வெற்றிப்பெறும் என அமித்ஷா கூறியுள்ளார்.
தேர்தல் குறித்து ஊடகமொன்றிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் குறிப்பிடுகையில், “பா.ஜனதா 282க்கும் அதிகமான தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப்பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையும் உயரும்.
வாக்குப்பதிவு தொடர்பான எங்களுடைய பகுப்பாய்வு அதிகமான தொகுதிகளில் வெற்றி என்பதைவிட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்யும் என உள்ளது” என்று கூறியுள்ளார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பா.ஜனதாவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. ஆனால் 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போன்று தனிப்பெரும்பான்மையுடன் வராது. கூட்டணி ஆட்சிக்குதான் வழி உள்ளது என பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள் வெளியானது. 2014 தேர்தலில் பா.ஜனதா 282 தொகுதிகளில் வென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உய
-
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 33ஆயிரத்து