நாடாளுமன்ற சபை அமர்வுகளில் ரஞ்சனை பங்கேற்க வைப்பதற்கு நடவடிக்கை
In இலங்கை January 18, 2021 9:31 am GMT 0 Comments 1558 by : Yuganthini

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ருவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது “ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற கூட்டங்களில் சமூகமளிக்க அனுமதிக்குமாறும், இது நீதிமன்ற வரம்புக்கு வெளியே நாடாளுமன்றத்தின் உரிமை என்ற அடிப்படையில், சபாநாயகரை ஐக்கிய மக்கள் சக்தியான எதிரணி அதிகாரபூர்வமாக கோரும்” என பதிவேற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.