நாடாளுமன்ற தேர்தல் – காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு
In இந்தியா April 2, 2019 3:21 am GMT 0 Comments 3054 by : adminsrilanka

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. டெல்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை வெளியிடவுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையிலுள்ள மக்களின் கருத்துகளை கேட்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்த தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஏழை மக்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருமான உத்தரவாத திட்டம், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, இளைஞர்கள் தொழில் ஆரம்பிக்க கடன், சிறு வியாபாரிகளின் நலன், 2 லட்சம் ரூபாய் வரை விவசாய கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்களும் இதில் உள்ளடங்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட
-
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான்
-
பிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 21 ஆயிரத்து 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட