நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
In இந்தியா April 8, 2019 8:06 am GMT 0 Comments 2144 by : adminsrilanka
தமிழகம் முழுவதும் 234 மையங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். அதேபோன்று பாதுகாப்பு பணியில் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் உள்ளிட்டோர் முன்கூட்டியே தங்களது வாக்குகளை அளிப்பதற்காக தபால் வாக்குப்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்குப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 234 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், தபால் வாக்குப்பதிவும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான ப
-
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி