நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு!
In இந்தியா January 6, 2021 5:43 am GMT 0 Comments 1344 by : Krushnamoorthy Dushanthini

நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதன்படி முதல் கட்டமாக, ஜனவரி 29 முதல், பெப்ரவரி 15 வரையிலும், இரண்டாம் கட்டமாக, மார்ச் 8 முதல், ஏப்ரல் 8 வரையிலும் கூட்டத் தொடரை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், முதல் நாளில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். இதனையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்வார் என்பதுடன் இது தொடர்பான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.