நாடு தழுவிய ஊரடங்கினால் எண்ணற்ற குடும்பங்கள் சிதைந்துள்ளன – ராகுல் காந்தி
In இந்தியா November 10, 2020 3:02 am GMT 0 Comments 1417 by : Krushnamoorthy Dushanthini

நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் காரணமாக எண்ணற்ற குடும்பங்களைச் சிதைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிப்படைந்துள்ளமையால் அவரால் கல்வியை தொடர முடியுமா என்ற கவலையே அவர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த துக்கமான நேரத்தில் நான் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மோடி அரசு வேண்டுமென்று மேற்கொண்ட நாடு தழுவிய ஊரடங்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் எண்ணற்ற குடும்பங்களைச் சிதைத்து விட்டது. இதுதான் உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.