நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க வலிமையான இராணுவம் தேவை – பிபின் ராவத்
In இந்தியா November 11, 2020 2:32 am GMT 0 Comments 1436 by : Krushnamoorthy Dushanthini

நாட்டை, மக்களை, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க வலிமையான இராணுவம் தேவை என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்கான இணையத்தளத்தின் ஐந்தாம் ஆண்டிற்கான மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “இந்தியா இப்போது எல்லையில் மிகவும் சாதக மற்ற சூழலை சந்தித்து வருகிறது. நம்மிடம் வலுவான இராணுவம் இல்லாவிடில் நம் எதிரிகள் அதை பயன்படுத்தி வாலாட்ட துவங்கிவிடுவர்.
நாட்டை, மக்களை, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க வலிமையான இராணுவம் தேவை. அதற்காக நாம் போருக்கு தயாராக இருக்கிறோம் எனக் கூறக்கூடாது.
எல்லையில் அமைதியை வலிமையான இராணுவத்தால் மட்டுமே நிலை நாட்ட முடியும். நாம் யார் மீதும் போர் தொடுக்க மாட்டோம். அதற்காக நம் எல்லையை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது. நம் நட்பு நாடுகளுடன் வலிமையான இராணுவ உறவு வைத்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.