நாட்டின் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – சில இடங்கள் விடுவிப்பு
In ஆசிரியர் தெரிவு January 6, 2021 1:47 am GMT 0 Comments 1455 by : Dhackshala

இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (புதன்கிழமை) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் திவனாவத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொரகல்ல பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரைப்பற்று 8ன் கீழ் 1, 8ன் கீழ் 3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கறைப்பற்று 05ஆம் மற்றும் 14ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.