இலங்கையில் கொரோனா பாதிப்பு அரை இலட்சத்தைக் கடந்தது!

நாட்டில் இன்று மட்டும் 687 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து 50ஆயிரத்து 229ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இதுவரை 43 ஆயிரத்து 267 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் இன்னும், ஆறாயிரத்து 718 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 244 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.