நாட்டில் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் குறித்த அறிவிப்பு!

நாட்டிர் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் தனிமைப்படுத்தல் அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, வெள்ளவத்தை மயூரா பிரதேசம் நாளை திங்கட்கிழமை காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கிரான்ட்பாஸ் பிரதேசத்தின் சிறிசந்த செவன, சிறிமுது உயன, மாளிகாவத்தை பிரதேசத்தின் லக்ஹிரு செவன, பொரளை, சிறிசர உயன ஆகிய குடியிருப்புத் திட்டங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை காலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்படுகின்றன.
அத்துடன், கொழும்பின் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம்வீதி, வாழைத்தோட்டம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை ஆகிய பொலிஸ் அதிகாரப் பிரிவுகளும், கொம்பனித்தெருவின் வேகந்த கிராமசேவகர் பிரிவும், பொரளையில் உள்ள வனாத்தமுல்லை கிராமசேவகர் பிரிவும், வெல்லம்பிட்டியில் உள்ள சாலமுல்ல கிராமசேவகர் பிரிவும் லக்சந்த செவன வீட்டுத்திட்டம் என்பனவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் அதிகார பிரதேசத்திற்குட்பட்ட கெரவலப்பிட்டிய, ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்த மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் பேலியகொட பொலிஸ் பிரிவில் பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதனிடையே, பேலியகொட பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பேலியாகொடவத்த, பேலியாகொட கங்கபட, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவு நீடிக்கும்.
கிரிபத்கொடை பொலிஸ் அதிகார பிரிவில் வெலேகொட வடக்கு பகுதியில் தனிமைப்படுத்தல் தொடரும்.
மேலும், நீர்கொழும்பு பொலிஸ் அதிகார பிரிவிற்குட்பட்ட எம்.சி.குடியிருப்புத் தொகுதி மற்றும் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கெரவலபிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள நைய்துவ பகுதியும் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட துவே வத்த பகுதியும் நாளை காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன், பேலியகொடை பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹனவீர மாவத்தை பகுதியும் ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவுக்குபட்ட வெலிகந்த பகுதியும் நிட்டம்புவ பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இந்ரா மாவத்தை பகுதிகளும் நாளை காலை ஐந்து மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேகங்கல்ல கிழக்கு மற்றும் வேகங்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும் சிறிய ஹீனிடியங்கல கிராம சேவகர் பிரிவும் நாளை காலை தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை அல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மறுஅறிவித்தல் வரையில் அவ்வாறே நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.