நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை January 17, 2021 3:13 am GMT 0 Comments 1327 by : Dhackshala

நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி களுத்துறை – இந்துவர பகுதியின் துன்தூவ கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேருவளை பகுதியில் 9 கிராம சேகவர் பிரிவுகளும் பானந்துறை பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவும் களுத்துறை பகுதியில் 20 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.