நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.