நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணம்!
நாட்டில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பைச் சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர், கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இவரின் மரணத்துக்கான காரணம், பக்டீரியா தொற்று மற்றும் கொரோனா தொற்றுடன் நீண்டநாள் நுரையீரல் பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இவர், கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு கடந்த 25ஆம் திகதி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம், நிமோனியா மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேலியகொட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நூற்றுக்கணக்கான மீட்டர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவைக் காப்பாற்ற இரண்டு வார
-
இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவரால் மனித உரிமைகள் ஆணைக்க
-
பதுளை- பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுக
-
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் வகிப்பதற்கு சீனா ஆதரவு
-
கிழக்கு உக்ரேனிய நகரமான கார்கிவ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர
-
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்த
-
கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லியன் பவுண்டுகளை எட்டியதாக தேசிய புள்ளிவிபர அலுவ
-
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வ
-
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம
-
படல்கும்புரைப் பகுதியின் அலுப்பொத்தை கிராமத்தினை 46 நாட்கள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி முடக்கியிருந