நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு
In இலங்கை February 17, 2021 9:44 am GMT 0 Comments 1211 by : Yuganthini
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பினை பேணிய, நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை, இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வாரம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது, கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்களுக்குமான பி.சி.ஆர்.பரிசோதனைகள் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 4பேர் மாத்திரமே நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வசிப்பவராக கருதப்படுகின்றனர். ஏனையவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் சுமார் 108பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 232 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.