நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களின் இரு நூல்கள் வெளியீட்டு வைப்பு
In இலங்கை January 5, 2021 6:09 am GMT 0 Comments 1314 by : Yuganthini

நாவிதன்வெளி பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களின் இரு நூல்கள் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களிற்கு பயிற்சி காலத்தில் வழங்கப்பட்ட பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ‘தாபன விதிக்கோவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வினா விடைகள்’, ‘உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத மனிதர்கள்’ ஆகிய இரு நூல்கள் நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் பட்டதாரி பயனர்களினால் இந்நூல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப் பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர், கே.பி.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.