நிக்கோஸ் சதம்: மே.தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் நியூஸி. சற்று தடுமாற்றம்!

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில், கெய்ல் ஜேமிசன் 1 ஓட்டத்துடனும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காது 117 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெலின்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்போது நியூஸிலாந்து அணி சார்பில், அணித்தலைவர் டொம் லதம் 27 ஓட்டங்களையும் டொம் பிளெண்டல் 14 ஓட்டங்களையும் வில் யங் 43 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 9 ஓட்டங்களையும் வட்லிங் 30 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் 3 விக்கெட்டுகளையும் ச்சீமர் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.