நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்!
In ஆசிரியர் தெரிவு November 12, 2020 4:37 pm GMT 0 Comments 1625 by : Litharsan

2020ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, 2021 வரவு செலவுத் திட்டத்தின் விவாதமானது, சமர்ப்பித்தல் தினம் உள்ளடங்கலாக 21 நாட்களுக்கு நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கான தினங்கள் 19 என தவறுதலாகக் குறிப்பிடப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வரவுசெலவுத்திட்ட விவாதம் 19 நாட்கள் என அறிக்கையிடப்பட்டிருந்தமையால் சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.