நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யக்கூடாது எனக் கோரிய மனு மீதான விசாரணை- சுமந்திரன் முன்னிலை
In இலங்கை November 20, 2020 4:56 am GMT 0 Comments 1972 by : Dhackshala
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது
எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
அதேநேரம், மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுமந்திரன், மணிவண்ணன், சயந்தன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர்.
போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
இதற்கான அறிவித்தல் எதிர் மனுதார்களுக்கு மனுதாரர்களின் சட்டத்தரணியினால் பதிவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
எதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரை குறிப்பிட்டுள்ளனர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என்று எதிர்மனுதார்களான வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் அவர்களின் பணியாற்றுபவர்களுக்கும் தலையீட்டு எழுத்தாணைக் கட்டளை வழங்குமாறு மனுதாரர்கள் கோரவுள்ளனர்.
மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர் மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்றும் கோரவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.