நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழக முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்
In இந்தியா November 23, 2020 10:13 am GMT 0 Comments 1448 by : Dhackshala

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணங்களின் திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 31 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், 25ஆம் தேதி நிவர் புயல் கரையை கடப்பதால், முதலமைச்சரின் பயணத்திட்டம் 25ஆம் திகதிக்கு பதிலாக 27ஆம் திகதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.