நிவர் புயல் பாதிப்புகள் : முதற்கட்டமாக 74 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு!
In இந்தியா December 9, 2020 10:28 am GMT 0 Comments 1347 by : Krushnamoorthy Dushanthini

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக 74.24 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
நிவர் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக கோடி 74.24 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
நிவர் புயலால் சேதமடைந்த வீடுகள், நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.