நிவர் புயல் : புதுச்சேரியில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிப்பு!
In இந்தியா November 26, 2020 5:06 am GMT 0 Comments 1437 by : Krushnamoorthy Dushanthini

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் காலை முதல் காற்றும் லேசான மழையும் பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த சமயத்தில் 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளதுடன், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை கனமழை பெய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
புயல் கரையை கடந்த சமயத்தில் புதுச்சேரியில் 7 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடடன், இவற்றை பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்பு படையினர் பொதுப்பணித்துறையினர் அகற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், இதனைத்தவிர பெரிய அளிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.