நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.ஜே.யேசுதாஸின் குரல்
In சினிமா April 16, 2019 2:21 pm GMT 0 Comments 1798 by : adminsrilanka

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவர், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்திலேயே பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
கௌசல்யா ராணி தயாரிப்பில் அதிக பொருட்செலவில், பாபு யோகேஸ்வரன் இயக்கித்தில் உருவாகிவருகிறது ‘தமிழரசன்’ திரைப்படம்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கின்றார். அதிரடி அக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தில் இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய ‘பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா’ என்ற புரட்சிகரமான பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘பழசிராஜா’ படத்தில் பாடிய யேசுதாஸ், அதன் பிறகு திரைப்படங்களில் பாடாமல் தவிர்த்து வந்தார். 10 ஆண்டுகள் கழித்து தங்களது திரைப்படத்தில் யேசுதாஸ் பாடியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கின்றார். இவர்களுடன், சுரேஷ் கோபி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, வை.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இளையராஜா இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் புவன் சந்திரசேகர் படத்தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகிவருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.