“நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” – ராகினி திரிவேதி
In சினிமா February 1, 2021 12:03 pm GMT 0 Comments 1146 by : Krushnamoorthy Dushanthini

நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக நடிகை ராகினி திரிவேதி தெரிவித்துள்ளார்.
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு பினையில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் செவ்வியளித்த அவர், “எல்லா குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடவுளின் ஆசிர்வாதத்தால், உதவியால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், இரசிகர்கள் தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.