பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணம்!
In ஆசிரியர் தெரிவு February 5, 2021 10:11 am GMT 0 Comments 1707 by : Litharsan
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முள்ளிவாய்க்கால் நோக்கிச் செல்கின்றது.
பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி, தற்போது முல்லைத்தீவுக்கு வந்துள்ள நிலையில் முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகனக் பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராத அளவில் திரண்டு பேருந்திரளாக பேரணி முன்னேறிவருகிறது.
அத்துடன், முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும் போராட்டத்துடன் இணைந்துள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி முல்லைத்திவு நகர்நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவில் சிவில் சமூகத்தினர், மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அதிகமானோர் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பேரணியுடன் இணைந்துள்ளார்.
நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி- நீராவியடியில் தரிசனம்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது.
தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், சட்டத்தரணி சுகாஸ் ஆகியோர் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் பேரணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயிலை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் தரிசனத்தைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் செல்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.