நீரில் மூழ்கி மாணவி மரணம் – ஆசிரியை கைது!

வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களை நீராட அழைத்துச்சென்ற ஆசிரியையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை, கல்தொட்ட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நீரில் மூழ்கி நேற்று முன்தினம் (30) உயிரிழந்தார்.
குறித்த ஆசிரியை பாடசாலையின் அதிபரிடமோ அல்லது வலய கல்விப் பணிப்பாளரிடமோ எவ்வித அனுமதியினையும் பெறாமல் மாணவர்களை வளவை கங்கைக்கு நீராட அழைத்துச் சென்றுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.