நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்
In இலங்கை November 10, 2020 10:20 am GMT 0 Comments 2466 by : Dhackshala

வவுனியா – ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் பெற்றோர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியில் சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக் குழியில் விழுந்துள்ளார்.
இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சயீவினி (வயது 6) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.