நூற்றாண்டுகள் பழமையான பைவார்ட் மார்க்கட் குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல்!

ஒட்டாவாவின் சரித்திரப் புகழ் மிக்க, நூற்றாண்டுகள் பழமையான பைவார்ட் மார்க்கட் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலினால், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான குறித்த பகுதியின் வில்லியம் வீதியில், பல்வேறு உணவகங்கள், கடைகள் வெளிப்புற சிறு விற்பனை நிலையங்கள் நிறைந்துள்ள நிலையில், அங்குள்ள விட்டோரியா டிராட்டோரியா எனப்படும் இத்தாலிய உணவகம் ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீப்பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், உணவகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், இந்த தீ விபத்தின் போது, அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த தீ பரவலானது எப்படி பரவியது என்பது குறித்து தகவல் எவையும் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)
-
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்
-
இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட
-
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன
-
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப