நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9பேர் உயிரிழப்பு- 34பேர் காயம்!

நேபாளத்தின் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் பைடாடியில் உள்ள படான் நகராட்சி-8 இன் கோடே என்ற இடத்தில் பயணிகள் பேருந்து விபத்தில் சிக்கியதில் 9பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34பேர் காயமடைந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில், பேருந்து வீதியில் இருந்து 600 மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இறந்தவர்களில், ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள். அந்த இடத்தில் இருந்து எட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுடன் 7 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக தங்கடிக்கு அனுப்பப்பட்டதாகவும், மேலும் 27பேர் ததேல்துரா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன் பேருந்து உரிமையாளர் பிரேந்திர கார்க்கி பேருந்தை ஓட்டி வந்தவரும் காயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.