நேர்மறையான சோதனைக்கு சில நாட்களுக்குப் பிறகு பராமரிப்பு இல்லங்களுக்கு அனுப்பப்படும் மக்கள்!
In இங்கிலாந்து November 17, 2020 10:53 am GMT 0 Comments 1875 by : Anojkiyan

தொற்றுநோயின் தொடக்கத்தில் நேர்மறையான கொவிட் பரிசோதனை செய்த ஐம்பத்து மூன்று பேர், 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வேல்ஷ் பராமரிப்பு இல்லங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்ட 1,729 பேரில் அவர்கள் இருந்ததாக புதிய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
வேல்ஷ் கன்சர்வேடிவ் ஆண்ட்ரூ ஆர்.டி. டேவிஸ் கூறுகையில், ’53 வெளியேற்றங்கள் கொரோனா வைரஸை பாதிக்கப்படக்கூடிய அமைப்புகளுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
மார்ச் 1 முதல் மே 31 வரை நேர்மறையான பரிசோதனையின் பின்னர் 167 நோயாளிகள் ஒரு பராமரிப்பு இல்லத்திற்கு வெளியேற்றப்பட்டதாக சுகாதார அமைச்சர் வாகன் கெதிங், டேவிஸுக்கு வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மறையான சோதனையின் இரண்டு வாரங்களுக்குள், மூன்றில் ஒரு பங்கிற்கு கீழ் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.