நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்
In உலகம் February 17, 2021 12:54 pm GMT 0 Comments 1225 by : Jeyachandran Vithushan

வட மத்திய நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் 27 மாணவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களை மீட்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக அம் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை வெளியாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் சில பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் பெரும்பாலும் கடத்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.