நொவிசொக் சர்ச்சையில் சிக்கிய சலிஸ்பரி நகருக்கு விருது!
In இங்கிலாந்து April 15, 2019 6:33 am GMT 0 Comments 2236 by : Varshini
பிரித்தானியாவில் சலிஸ்பரி என்றதும் அனைவருக்கும் நொவிசொக் நச்சுத்திராவக தாக்குதலே நினைவிற்கு வரும்.
ஆனால் பிரித்தானியாவில், வாழ்வதற்கு மிகவும் உகந்த இடமாக தற்போது சலிஸ்பரி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சண்டே ரைம்ஸ் பத்திரிகை மேற்கொண்ட தரப்படுத்தலில் இந்த இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
நரம்பைச் செயலிழக்கச் செய்யும் நொவிசொக் என்ற நச்சுத்தாக்குதலில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளி ஒருவரும் அவரது மகளும் கடந்த வருடம் மார்ச் மாதம் பாதிக்கப்பட்டனர். சலிஸ்பரியின் எலிசபெத் பூங்காவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
அதன்பின்னர் கடந்த வருடம் ஜூன் மாதம் மேலும் இருவர் பாதிப்புக்கு உள்ளானதோடு, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இத்தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே உள்ளதென பிரித்தானியா குற்றஞ்சாட்டியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது. சலிஸ்பரியில் நச்சுத்தாக்குதலின் தாக்கம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர், பிரித்தானியாவில் வாழ்வதற்கு மிகவும் உகந்த இடமாக சலிஸ்பரி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
5ஆம் 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சிறந்த கட்டட கலையம்சங்களை கொண்டு அமைக்கப்பட்ட தேவாலயம், ரம்மியமான சூழல், ரயில் இணைப்புகள் மற்றும் அதிவேக இணைய இணைப்பு வசதி போன்றவற்றால் இந்த இடம் தனித்துவம் பெற்றுள்ளது.
தரப்படுத்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பத்திரிகை நிறுவனம், குற்றங்கள் தொடர்பான பின்னணி, பாடசாலை, சொத்துக்களின் விலை மாத்திரமன்றி அழகியசூழல், கலாசாரம் மற்றும் சமூகஒற்றுமை போன்ற பலவிடயங்களை மையமாகக் கொண்டே சலிஸ்பரியை தெரிவுசெய்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.