பச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
In இலங்கை February 19, 2021 3:59 am GMT 0 Comments 1208 by : Yuganthini
பச்சிலைப்பள்ளியின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் உப.தவிசாளர் முத்துக்குமாரன் கஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரிடம் பளை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணியில் கலந்து கொண்டமைக்காக இவர்களிடம் நேற்று (வியாழக்கிழமை ), பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தவிசாளர் கூறுகையில், “எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கமைவாக குறித்த போராட்டம் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட்டதால் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம்.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற ஒன்று கூடுவதற்கான உரிமை இங்கு இருக்கின்றது என்றதன் அடிப்படையில் கலந்து கொண்டிருந்தோம்.
எமக்கு எந்தவிதமான நீதிமன்ற தடை உத்தரவும் கிடைக்கப்பெறாத பட்சத்தில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.