பஞ்சத்தை தவிர்க்க எத்தியோப்பியா உள்ளிட்ட 07 நாடுகளுக்காக ஐ.நா. நிதி ஒதுக்கீடு !
In உலகம் November 18, 2020 9:09 am GMT 0 Comments 1749 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் எத்தியோப்பியா உள்ளிட்ட 07 நாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் மோதல்கள், பொருளாதார வீழ்ச்சி, காலநிலை மாற்றம் போன்றவற்றால் எதிர்நோக்கும் பஞ்ச அபாயத்தைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை அவசர நிதியை நேற்று வெளியிட்டது.
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த 07 நாடுகளில் எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், புர்கினோ பசோ, கொங்கோ குடியரசு, தென் சூடான், யேமன் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.
அதன்படி யேமனுக்கு சுமார் 30 மில்லியன் டொலர், ஆப்கானிஸ்தான் மற்றும் வடகிழக்கு நைஜீரியாவில் தலா 15 மில்லியன் டொலர், தெற்கு சூடான் மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசில் தலா 7 மில்லியன் டொலர் மற்றும் புர்கினோ பசோவிற்கு 6 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எத்தியோப்பியாவில் நிலவி வரும் வறட்சி காரணமாக அங்கு பலர் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் எத்தியோப்பியாவிற்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.