யாழில் சிறுமிகளைக் கடத்தி துஷ்பிரயோகம்– பொலிஸ் வலையில் சிக்கிய 3 இளைஞர்கள்
In இப்படியும் நடக்கிறது March 2, 2019 10:23 am GMT 0 Comments 8745 by : Litharsan
காதலிப்பதாகத் தெரிவித்து 13 மற்றும் 14 வயதுச் சிறுமிகளை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக 3 இளைஞர்களை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.
மறுநாள் சிறுமி வீதியால் சென்றதை தயார் கண்டுள்ளார். சிறுமியை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினார். அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, காதலிப்பதாகத் தெரிவித்து தாவடியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தெரியவந்தது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
அதேவேளை, கடந்த 24ஆம் திகதி 13வயதுச் சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு தாமதமாகி வந்துள்ளார். அவரிடம் தாயார் விசாரித்தபோது, சுன்னாகத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
அது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்தார். சிறுமியிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைவாக 18 வயதுடைய இளைஞனை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை, குறித்த சிறுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுன்னாகத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதனையும் அவர் இப்போது விசாரணைகளின் போது கூறியுள்ளார்.
அதனையடுத்து அந்த இளைஞனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.