பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க மோடி வலியுறுத்து!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா தலைமையிலான 12ஆவது பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில் காணொளித் தொடர்பாடல் மூலம் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்சினையாக பயங்கரவாதம் தற்போது உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இதற்கு பொறுப்பேற்கச் செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு தொடங்கி 2021ஆம் ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்தியா தலைமையில் நடைபெறவுள்ள அடுத்த மாநாட்டில், கடந்த மாநாடுகளில் எடுத்த முடிவுகளை மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிடப்படலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.