பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களை கைது செய்க: சம்பிக்க
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை தடை செய்து, அதன் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எம்முடன் ஒருங்கிணைந்து செயற்படக்கூடிய முஸ்லிம் சமூகமொன்றே எமக்கு வேண்டும். அரபு மொழி பேசும் முஸ்லிம் சமூகம் இலங்கைக்கு வேண்டாம்.
பயங்கரவாத தடை சட்டம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அவசகால நிலையும் அமுலில் உள்ளது. அதற்கமைய இவ்விரு நியமங்களின் அடிப்படையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி அதன் உறுப்பினர்களும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அத்துடன், ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, வெறுக்கத்தக்க பிரசாரங்களை மேற்கொள்ளும் அனைவரையும் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு அவர்களை தீவிரவாதிகள் என பெயரிட வேண்டும்.
அவர்கள் ஏதேனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின், அவற்றை அரசாங்கத்திற்கு சொந்தமாக்குமாறும் அரசாங்காத்தை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தொரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை
-
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போர
-
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்
-
பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை
-
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்
-
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 560 கொரோனா தொற்றாளர்