பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
In இங்கிலாந்து December 15, 2020 9:49 am GMT 0 Comments 1826 by : Anojkiyan

பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தப் புதிய சட்டமூலத்தின்படி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தத் தவறினால் சமூக வலைத்தள நிறுவனம் சுமார் 16.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களை தடுப்பது மற்றும் பயங்கரவாத உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை சமூக வலைத்தள நிறுவனங்கள் உறுதிப்படுத்துவது கட்டாயமாகிறது.
பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் அல்லது செயற்பாட்டைக் குறித்து எளிதில் புகாரளிக்கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரும் இந்த சட்டமூலம், பாதுகாப்பு நடவடிக்கை குறித்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.