பரிஸ் மாஸ்டர்ஸ்: முதல்முறையாக டேனில் மெட்டேவ் சம்பியன்!

பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்டேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்டேவ், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஸ்வெரவ் 7-5 என போராடிக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற செட்டுகளில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் சிறப்பாக விளையாடிய டேனில் மெட்டேவ், 6-4, 6-1 என செட்டுகளைக் கைப்பற்றி சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.