பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு வலியுறுத்து!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான ஆவணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில், வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மருத்துபீட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.