பல்கலைக்குள் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இணைக்க தீர்மானம்
In இலங்கை January 28, 2021 9:23 am GMT 0 Comments 1494 by : Jeyachandran Vithushan

பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இந்த ஆண்டில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை தொடர்பான திட்டம் மீளாய்வு செய்யப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களை உள்வாங்கும் புதியமுறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.